நாமக்கல் மாவட்டத்தில் முதல் நாள் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்பொழுதும் தொடர்ந்து பரவி கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் இருந்த ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவியுடன் தொடர்பிலிருந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவி பயின்ற வகுப்பறையும் மூடப்பட்டுள்ளதுடன், கிருமி நாசினி கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவிக்கு லேசான தொற்று அறிகுறியே இருந்ததால், வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…