பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – மாநில சுகாதார செயலாளர்!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து 400 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருந்து. இந்நிலையில் மாணவர்களுக்கு சில மாதங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்லாவிட்டால் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறியதை அடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வகுப்புகள் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து பல பகுதிகளில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், மாணவர்களின் மன நிலை கருதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டதாகவும், பள்ளிகள் தொடங்கிய ஒரு மாதத்தில் இதுவரை 400 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.