இஸ்ரோவில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா…!
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது அதி வேகமாக பரவி வருகிறது.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும்,அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும்,கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,61,500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்,மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1கோடியே 45 லட்சத்தில் இருந்து 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில்,திருநெல்வேலி மாவட்டத்தின் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(ISRO) பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.