திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா…!
சென்னையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில்,சென்னை அண்ணா சாலையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பெரும் தண்டையார்பேட்டை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,அடுத்து வரும் 3 நாட்களுக்கு கடையை திறக்க அனுமதி இல்லை என்றும்,கடையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.