#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1185 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,17,839 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 120 பேர் பலியாகியுள்ளனர். அதில், 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழப்பின் எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,83,937 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025