#JUSTIN: வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை தொகுதி எம். பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
நலமுடன் உள்ளேன்.
-சு.வெங்கடேசன் எம்.பி
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 23, 2020