ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி..!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.