தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது பொது முடக்கம் போடும் சூழ்நிலை இல்லை. இரண்டு வாரங்கள் மக்கள் வீட்டிலிருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ, அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என்றும், அரசு உத்தரவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர் உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 81 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இதுவரை மாஸ்க் போடாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து, ரூ.5.7 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…