#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் இன்று 25 வயது பெண் உட்பட 65 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,120 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக  செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 38 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 516 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று கொரோனவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 25 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

தடையை மீறி பிரேமலதா தலைமையில் பேரணி… தொண்டர்களால் நிறைந்த கோயம்பேடு!

சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…

13 minutes ago

ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

46 minutes ago

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

1 hour ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

2 hours ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

3 hours ago