சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்துசென்ற நிலையில் தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நேற்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில், இதுவரை 8324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்துசென்ற நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…