தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அடுத்த மாதம் உக்கிரமாக இருக்கும் என்று வெளியாகியுள்ள ஆய்வறிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 465 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அத பாதிப்பு எண்ணிக்கை 4,40,215லிருந்து 4,56,183 ஆக அதிகரித்து உள்ளது.மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190லிருந்து 2,58,685 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011லிருந்து 14,476 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் பாதித்த 1,83,022 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல மகாராஷ்டிராவில் 1,39,010 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனா பாதிப்பில் இருந்து 69,631 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6,531 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,நாடு முழுவதும் சுமார் 4.5 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதோடு மட்டுமின்றி தலைநகரில் தலைவிரித்து ஆடி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக உயரும் என்றும் அதில் 60% சதவீத பாதிக்கப்பட்டவர்களாக சென்னையை சேர்ந்தவர்களாக இருப்பர்கள் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி சென்னையில் கொரோனா அக்டோபர் மாதம் மிக உச்சத்தை அடையும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை தெரிவித்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஊரடங்கு கொரோனா உச்ச நிலை அடையும் வேகத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…