சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக வெளியீடு .!
சென்னை மாநகராட்சி கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நேற்று மட்டும் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 82 பேர் கொரோனாவால் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1210 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில், நேற்று மட்டும் 94 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 189 பேரும், திருவிக நகரில் 169 பேரும், தண்டையார்பேட்டை 77 பேரும், தேனாம்பேட்டை 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.