கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு – முதலமைச்சர் பழனிசாமி
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார், பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனையின்போது முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார் .
அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகக்தான் இருக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவிர்த்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.