தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..! புதிதாக 10,448 பேருக்கு கொரோனா..! 270 உயிரிழப்பு ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 10,448 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10,448 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,88,746 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 689 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 270 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,338 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 21,058 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 22,44,073 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,71,085 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,04,80,340 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 1,14,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)