தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,46,388 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,989 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடத்த 24 மணி நேரத்தில், 2,375 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.