தமிழகத்தில் கொரொனோ பரவலானது நாள்தோறும் அதிகரித்து வரும்நிலையில் தற்போது 7,000 த்தை நெருங்கியுள்ளது.இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரொனோ வைரஸின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இருந்து வந்த 8பேர் உள்பட 6,711பேர் புதிதாக கொரொனோ தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,40,145 அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 2,105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கடலூர்,கிருஷ்ணகிரி,ஈரோடு,மதுரை,திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற 11 மாவட்டங்களில் கொரொனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில்,கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனோ தொற்றினால் இறந்துள்ளனர்.இதனால் மாநிலம் முழுவதும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,927 ஆக உள்ளது.தற்போது 46,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் 2,339பேர் கொரோனோவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக கொரொனோ தடுப்பு குழு மருத்துவர் பிரப்தீப் கவுர் ட்விட்டரில் கூறியதாவது,”இதே நிலை நீடித்தால் நிலைமை மிக மோசமாகும்.எனவே அவசியமின்றி வெளியே யாரும் செல்ல வேண்டாம்.மேலும்,முகக்கவசம்,தனி நபர் இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…