தேனியில் இன்று மட்டும் புதிதாக 16 பேருக்கு கொரோனா உறுதி.!
தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கொரோனாவால் 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக தேனியில் இன்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 39 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் இன்று 7பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே 149 ஆக இருந்த நிலையில், தற்போது 156 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னைதான் தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திகழ்கிறது. இதையடுத்து கோயம்புத்தூரில் 60, திண்டுக்கல் 46, திருநெல்வேலி 40, திருச்சி 36, ஈரோடு 32, நாமக்கல் 33 போன்ற மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.