திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…