முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன்
முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன்
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இரவுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் தற்போது பொது ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியதாவது ‘முழு ஊரடங்கு முடிவடைந்த நிலயில் பொது ஊரடங்கு அமலில் இருக்கும். சென்னை மக்கள் அனைவரும் இனிமேல் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்லவதை தவிர்க்க வேண்டும். மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.