நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகைகள் எடுத்து வருகிறது.இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1397 பேர் பாதிக்கப்பட்டு 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 அதிகரித்துள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் என்றும் கொரோனா பாதிப்புள்ள 50 பேரில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…