மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவருக்கு கொரோனா! அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை!
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களில் பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.