அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா..!
அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா பரவல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் காலம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர்கள் பலருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடம் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியான ஜோசப் சாமுவேல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பொன்ராஜ், சந்தோஷ் பாபு தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே சுதீஷ் ஆகியோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.