சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றுவரை 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு உறுதியாகியுள்ளது.
மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஐஐடி மாணவர்களுக்கு அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…