பிரான்சில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா!
பிரான்சில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையின், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் குடும்ப தலைவருக்கு (44) உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனையடுத்து, கடந்த -ம் தேதி அனைவரும் மண்டபத்தில் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில், குடும்பத்தலைவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அவர்கள் 5 பேரும், காரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு தொற்றுக்கு உள்ளான அந்த குடும்ப தலைவரை மட்டும் கொரோனா வார்டில் அனுமதித்துவிட்டு மற்றவர்கள் மீண்டும் ராமேசுவரம் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.