சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா ! 12 பேர் உயிரிழப்பு.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டுமே 1530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,37,685 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 9,883 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 3004 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.