#BREAKING: தமிழகத்தில் இன்று புதிதாக 5,528 பேருக்கு கொரோனா.!
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,528 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 991 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,45,606 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,29,416 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85,473 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 56,30,323 ஆக உள்ளது. மேலும், தற்போது 48,482பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.