தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா!
விளாத்திகுளத்தில் ஒரே நாளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் இன்றுவரை குறையாத நிலையில் தூத்துக்குடியிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் இருந்த வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 4ஆம் தேதி விளாத்திகுளத்தில் உள்ள 104 வியாபாரிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.
அவர்கள் தங்களது சளி மாதிரிகளை வழங்கி சென்ற நிலையில் தற்போது இதன் முடிவு வெளியாகியுள்ளது. பரிசோதனைக்கு வந்த 104 வியாபாரிகளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வந்த அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 25 பேருக்கு மறைவாக இருந்த கொரோனா தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.