2 காவலர்களுக்கு கொரோனா.! டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.!

சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால், அவர்கள் வேலை பார்த்த கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.
தமிழ்நாட்டு தலைநகர் சென்னை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறிக்கொண்டு வருகிறது. சென்னையில் இன்று மட்டுமே 174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த எண்ணிக்கை 1,257-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து, டிஜிபி அலுவலகத்தில் அவர்கள் வேலை பார்த்த கட்டுப்பாட்டு அறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த அறை மூடப்பட்டுவிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025