அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1700-ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 81,103 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,73,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 1,027 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,091 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 11 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 10,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025