கோயம்பேடு மார்க்கெட் மூலம் 1589 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 6009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,589 வழக்குகள், கோயம்பேடு சந்தை மூலம் பதிவான வழக்குகளாகும்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தமிழகத்தில் 52 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2,06,407 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.