சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா! – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லி போன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் எச்சரிக்கை.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா என எல்லா இடங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது. கொரோனா தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது, டெல்லி போன்ற சூழல் உருவாகலாம் என்றும் எச்சரித்தார். இதனால் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

56 minutes ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

1 hour ago

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

3 hours ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

4 hours ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

4 hours ago