கொரோனா எதிரொலி: விஜயகாந்த் வீட்டில் நடந்த தேமுதிக நிர்வாகியின் திருமணம்!

Default Image

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுவீச்சில் எடுத்துவருகிறது. 

பிரதமர் மோடியின் சுயஊடரங்கு உத்தரவை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதனால் முக்கியமான சாலைகள் மற்றும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும், சில திருமண நிகழ்ச்சி உறவினர்கள் இல்லாமலும் நடந்து உள்ளது. சில திருமணங்கள், தள்ளியும் போகியுள்ளது.

இந்நிலையில், இன்று சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த தேமுதிக நிர்வாகியின் திருமணம், தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் இன்று காலை விஜயகாந்த், பிரேமலதா, சதிஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட விஜயகாந்த் , விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்தியஅரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது. என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்