கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, வரும் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. நேற்று முதலே தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக – கர்நாடகா இடையிலான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…