தேனியில் கொரோனா எதிரொலி – வரும் 8 நாட்களுக்கு முழு கடையடைப்பு!

Published by
Rebekal

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு பின்பற்றப்படுகிறது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்திலும் கொரோனா எண்ணிக்கைநாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்திலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர்கள் சங்கம், மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தேனி நகர ஓட்டல்கள் சங்கம், தேனி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் சேர்ந்து ஆலோசனை கூட்டம்  நடத்தியுள்ளனர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைவரும் ஒன்றிணைந்து இன்று அதாவது ஜூலை 13 ஆம் தேதி முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

37 minutes ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

58 minutes ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

10 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

10 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

11 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

12 hours ago