தேனியில் கொரோனா எதிரொலி – வரும் 8 நாட்களுக்கு முழு கடையடைப்பு!
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை முழு கடையடைப்பு பின்பற்றப்படுகிறது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்திலும் கொரோனா எண்ணிக்கைநாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்திலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர்கள் சங்கம், மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தேனி நகர ஓட்டல்கள் சங்கம், தேனி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைவரும் ஒன்றிணைந்து இன்று அதாவது ஜூலை 13 ஆம் தேதி முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.