கொரோனா எதிரொலி : பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா..!
கொரோனா எதிரொலி காரணமாக பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிய தேரில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தேரோட்டம் நடைபெற்று வருகிறது.