முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே பணிபுரிந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என காவல்த்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதுஇதனால் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.ஒரு சில இடங்களில் காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.இது சற்று காவலர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா பரவியது என்று வதந்தி வெளியாகியது.இந்நிலையில் இது குறித்து சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில்,கொரோனா பரவியதாக கூறப்படும் பெண் காவலர் முதலமைச்சர் இல்லத்தில் பணிபுரியவில்லை.அவர் கிரீன் வேஸ் சாலையில் 30-ஆம் தேதி வரை பணியில் இருந்தார்.அதன் பிறகு அங்கு அவர் பணியில் இல்லை.பின்னர் 3-ஆம் தேதியன்று ஜெயந்தி என்ற அந்த காவலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 6 -ஆம் தேதி அன்று அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவித்ததின்பேரில் , காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.
எனவே பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…