கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை – சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 12-ஆம் தேதியும், 19ஆம் தேதியும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 12ஆம் தேதி நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், 19ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாமில்15 லட்சத்திற்கு மேற்பட்டோரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வில்லை என்றும், தேவைக்கேற்ப ஒவ்வொரு இடங்களிலும் பரிசோதனைகளை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து குறைந்த அளவு தடுப்பூசி கிடைத்ததால் இரண்டாம் கட்டமாக முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை குறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.