தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, எண்ணிக்கையாக இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 14 ஆம் நாளாக தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…