தமிழகத்தில் கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்வு!
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 24-ம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 74 பேரில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து 55-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.71 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,969 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 218 பெரும், திருவள்ளூரில் 193 பெரும், மதுரையில் 193 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.