தமிழகத்தில் விடுபட்ட உயிரிழப்பான 444-யும் சேர்த்து கொரோனாவால் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 10-ம் தேதி வரை உயிரிழந்தோரின் விடுபட்ட எண்ணிக்கை *444 என கொரோனா அறிக்கையில் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 22-ம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் விடுபட்ட எண்ணிக்கையும் சேர்த்து 3,144 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 74 பேரில், தனியார் மருத்துவமனையில் 24 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட (விடுபட்ட எண்ணிக்கையும் சேர்த்து) 512 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,939 (விடுபட்ட உயிரிழப்பையும் சேர்த்து) ஆக உயர்ந்துள்ளது.
அதற்க்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 210 பெரும், திருவள்ளூரில் 180 பெரும், மதுரையில் 174 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…