தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,34,436 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 94 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 87 பேரில், தனியார் மருத்துவமனையில் 37 பேரும், அரசு மருத்துவமனையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 28 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 3,214 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,729 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 419 பேரும், திருவள்ளூரில் 396 பேரும், மதுரையில் 357 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,785 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,446 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…