கொரோனா கோரத்தாண்டவம்.. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,200-ஐ கடந்தது!
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 31 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இன்று உயிரிழந்தோரின் விகிதம் 1.52 சதவீதமாக உயர்ந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது