தமிழகத்தில் 21 நாட்களுக்கு பின் 100- க்கு கீழ் பதிவான கொரோனா உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கடந்த 21 நாட்களுக்கு பின், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,24,071 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில், இன்று 80 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்த 80 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் விகிதம் 1.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 22 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 2,485 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,557 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 372 பேரும், திருவள்ளூரில் 368 பேரும், மதுரையில் 332 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,505 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,915 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

36 minutes ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

1 hour ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

1 hour ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

2 hours ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

2 hours ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

3 hours ago