தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,224 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதித்தோரின் எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,054 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 47 பேரும், அரசு மருத்துவமனையில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில், கடந்த 1 -ம் தேதி முதல் இன்று வரை (11 நாட்களில்) தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,224 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இம்மாத 3 -ம் தேதி முதல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது கூறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…