கொரோனாவில் உயிரிழந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை ! – தமிழக அரசு
கொரோனாவில் உயிரிழந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை என தமிழக அரசு கூறியுள்ளது.
உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடலை அரசே அடக்கம் செய்து வருவதால் பலர் தங்களது எதிரப்பை தெறிவித்து வருகின்றனர். இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று மாலை அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி “கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதை தடுக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது,
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, பிரிவு -74ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்” என்று ட்விட்டரில் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.