தமிழகத்தில் கொரோனா பாதிப்பு! 6 மற்றும் 7 தேதிகளில் முதல்வர் ஆய்வு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தென் மாவட்டங்களில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. முன்பை விட சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தென் மாவட்டங்களில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளார். அதன்படி, 6ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 7ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிகிறார்.