சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவந்த அரியலூரை சார்ந்த கூலித் தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோயம்பேட்டில் ஏற்கனவே ஏழு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வேலை செய்து வந்த அரியலூர் தொழிலாளிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர், கடந்த 27 -ம் தேதி தனது ஊருக்கு சென்று உள்ளார். பின்னர், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அருகே உள்ள மருத்துவமனைக்கு இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்.இதனையடுத்து, தற்பொழுது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனால், நக்கம்பாடி கிராமத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…