சென்னையில் இரண்டு மண்டலங்களில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!
கொரோனா இரண்டாவது அலை காரணமாக சென்னையில் இரண்டு மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 10,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையல் 17 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சென்னையில் இரண்டு மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது, சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,044, அண்ணா நகர் மண்டலத்தில் 3,041 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தி.ரு.விக நகர் 2,741, ராயபுரம் 2,488, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,305 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 மண்டலங்களில் தலா 2 ஆயிரத்தை கடந்திருந்தது.
Here’s the Info Graphic summary and Overall zone-wise status of Covid-19 cases in Chennai. #Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/AMvuLuKVDw
— Greater Chennai Corporation (@chennaicorp) April 21, 2021