கொரோனா ஊரடங்கு விதிமீறல் – சென்னையில் 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல்!

Default Image

கொரோனா ஊரடங்கு விதிமீறலால் கடந்த 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல்.

தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை பின்பற்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முகக்கவசம், கையுறை அணிதல் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை, அடிக்கடி கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் 500 ரூபாயும் நெறிமுறைகளைப் பின்பற்றத உடற்பயிற்சிக் கூடங்கள், சிகை அலங்கார நிலையங்கள் ஆகிய பொது இடங்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert